தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியமான அல்-கதீப் (Qatif) நகரில் தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் தீ வைத்து எரித்துக் கொலை செய்த சவுதி குடிமகன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அண்மையில் சவுதி அரேபிய அல்-கதீப் நகரில் 20 வயது இளைஞன் ஒருவர் தனது குடும்பத்தில் உள்ள தாய்-தந்தை-சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய அனைவரையும் வீட்டோடு தீ வைத்து எரித்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக் கொடூர சம்பவம் புனித ரமழான் மாதத்தில் அதுவும் நோன்பு திறப்பதற்கு சற்று முன்னர் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் methamphetamine (Shabu) எனும் போதைப் பொருள் பாவிக்கக் கூடிய, போதைக்கு அடிமையானவர் என முதற்கட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது.
தாய், தந்தை, சிறிய சகோதரி, சிறிய தம்பி ஆகிய தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் குற்றவாளி வீட்டின் அறை ஒன்றில் தள்ளி விட்டு அவர்கள் கதவை திறக்க முடியாதபடி அந்த அறையின் கதவை வெளியில் பூட்டி விட்டு பெற்றோலை ஊற்றி வீட்டை எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடு முழுக்க தீப் பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தாய்-தந்தை ஆகியோர் தங்களை காப்பாற்றும்படி பல முறை கெஞ்சியும் கத்தியும் உள்ளனர் இருந்தும் அவர்களை குற்றவாளி காப்பாற்றவில்லை. அதே போல் தீயில் கருகிக் கொண்டிருந்த சின்னஞ் சிறு சிறுமியும், சிறுவனும் தங்களையும் காப்பாற்றும் படி கத்திய போதும் கூட அவர்களையும் காப்பாற்றாது குற்றவாளி இக் கொடூர கொலைகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் அனைவரும் தீயில் கருகி இறந்துள்ளனர், பின்னர் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் வீட்டின் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொலையாளியையும் கைது செய்தனர்.