Ads Area

பிரதமர் பதவி விலகல் தொடர்பில் கம்மன்பில வழமை போன்று பொய்யுரைக்கிறார் என பிரதமர் தெரிவிப்பு.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவிற்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சற்று முன்னர் தெரிவித்துள்ளனர்.

பிரதமருக்கு இன்னும் 100 மேலான ஆசனங்கள் இருப்பதால், அவர் இராஜினாமா செய்வது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கடசியின் உறுப்பினர்கள், சுயேச்சை மற்றும் மதக் குழுக்களுடன் பிரதமர் விவாதிக்கவில்லை என்றும், வேறு எந்தக் கூற்றுகளும் தவறானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 120 எம்.பி.க்கள் ஆதரவளிப்பதாக இன்று காலை ஊடகங்களுக்குத் தெரிவித்த உதய கம்மன்பிலவின் கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe