சம்மாந்துறை பிரதேச சபையின் 50வது கூட்ட அமர்வின்போது கெளரவ உறுப்பினர்களுக்கான இப்தார் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நெளஷாட் அவர்களின் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இதில் அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி அவர்களின் பங்குபற்றலுடன் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் மாவட்ட திட்ட பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.