ரம்புக்கனையில் நேற்றையதினம் (19) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கவலை தெரிவிப்பதாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தனது டுவிட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது. ரம்புக்கனையில் இடம்பெற்ற சோகத்திற்கு வழிவகுத்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை பொலிஸார் மேற்கொள்வர். அனைத்து குடிமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என டுவிட் செய்துள்ளார்.