Ads Area

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70), நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு ஆகியுள்ளார். 

இம்ரான் கான் பதவி பறிபோனதன் விவரம்

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியது. ஆனாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஓட்டெடுப்புக்கு விடுவதில் பெரும் இழுபறி நிலவியது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு, நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கைசர் இணங்கி நடக்கவில்லை. 

ஒரே நாளில் சபை பல ஒத்திவைப்புகளை சந்தித்தது. நள்ளிரவுவாக்கில், “இம்ரான்கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அன்னிய சக்தியின் சதியில் ஒரு அங்கமாக நான் இருக்க விரும்பவில்லை” என்று கூறி சபாநாயகர் ஆசாத் கைசர் பதவி விலகினார். அவரது வழியில் துணை சபாநாயகர் காசிம் சூரியும் பதவி விலகினார்.

இப்படி அடுத்தடுத்து நடந்த திருப்பங்களைத் தொடர்ந்து, அடுத்த திருப்பமாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக், சபைக்கு தலைமை வகித்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தினார்.

இதில் மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 174 பேரின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவரது அரசு கவிழ்ந்தது.பாகிஸ்தான் வரலாற்றில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான்கான் தட்டிச் செல்கிறார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe