சம்மாந்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் பிரதேச செயலாளர் குழுவினர் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது.
விவசாயத்துக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்காகவும் மேலதிகமாக சேமித்துவைக்க எடுக்கப்படும் முயற்சியை முறியடிப்பதுடன் சீரான விநியோக முறைமையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.முகம்மத் ஹனிபா அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில், சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச சபையின் செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள், வீரமுனை பாதுகாப்புப்படை அதிகாரி, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள சில தீர்மானங்கள் இதோ.