தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத் அல்-அஹ்மதி கவர்னரேட்டில் சாராய தொழிற்சாலையை நடத்தி வந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவைத் பொது பாதுகாப்புத் துறையினர் அப்பெண்ணிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 200 சாராய போத்தல்களை பறிமுதல் செய்துள்ளதோடு அவரிடமிருந்து சாராயம் தயாரிப்பதற்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பெண் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் என்று பொதுவாக குறிக்கப்பட்டுள்ளதே தவிர அவர் ஆசிய நாடுகளில் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளிப்படுத்தப்படவில்லை.