தற்போதைய நிலைமை குறித்து பௌத்த தலைமைப் பீடாதிபதிகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அண்மையில் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
அவர் தலைமைப் பீடாதிபதிகளுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில்,
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு சம்மதிப்பதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தலைமைப் பீடாதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
20ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு கடந்த வாரம் அறிக்கையொன்றில் பிரதம தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்படாவிடின் ‘சங்க மாநாட்டை’ பிரகடனப்படுத்துவோம் என தலைமைப் பீடாதிபதிகள் எச்சரித்திருந்தனர்.
20வது திருத்தத்தை நீக்கி 19வது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.