சம்மாந்துறை அன்சார்.
எதிர் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் பூராகவும் திரைக்கு வரவுள்ள தளபதி விஜய் நடித்துள்ள ”Beast” திரைப்படத்திற்கு தற்போது குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் டிராமாவான இப்படம் முழுக்க முழுக்க திரையரங்குகளில் சாதனை படைக்கும் என எதிர்பார்கப்படுகிறது மேலும் இத் திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ரிலீஸாக இருக்கும்.
”Beast” திரைப்படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு காணப்படுவதாகவும், அதிக படியான வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு குவைத் அரசாங்கம் அண்மையில் பீஸ்ட் திரைப்படத்தை குவைத்தில் வெளியிட தடை விதித்துள்ள நிலையில் தற்போது கத்தார் அரசும் தடை விதித்துள்ளமை படக்குழுவினை கவலை கொள்ளச் செய்துள்ளது.
பீஸ்ட் திரைப்படத்திற்கு குவைத்தில் விதிக்கப்பட்ட தடையானது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தாத போதும் கத்தாரில் விதிக்கப்பட்ட தடையானது நிச்சயம் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் ஏனைய அரபு நாடுகளிலும் பீஸ்ட் படத்திற்கு விரைவில் தடை வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.