Ads Area

ஐக்கிய அரபு இராச்சிய கோடீஸ்வரருக்குச் சொந்தமான இரு தளங்களைக்கொண்ட உலகின் மிகப் பெரிய ஹம்மர் வாகனம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், பிரமாண்ட ஹம்மர் (Hummer  வாகனத்தின் உரிமையாளராகத் திகழ்கிறார். ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நெஹ்யான் எனும் இக்கோடீஸ்வரர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஆடம்பர வாகனங்கள் மீது அலாதி பிரயம் கொண்டவர் அவர். 718 வகையான 4X4 ரக வாகனங்கள் இவரிடம்  உள்ளன. இதனால் அதிக 4X4 ரக வாகனங்களை சேகரித்தவர் என கின்னஸ் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

சார்ஜாவில் இதற்காக நூதனசாலையொன்றில் இந்த வாகனங்களை அவர் சேகரித்து வைத்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் ஹம்மர் எச்1 (Hummer H1) ரக வாகனத்தின் பாணியில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட வாகனத்தையும் அவர் தன்வசம் வைத்துள்ளார். Hummer H1 X3 என இவ்வாகனம் அழைக்கப்படுகிறது.

அசல் ஹம்மர்1 வாகனமானது 4.86 மீற்றர் நீளத்தையும்  2.2 மீற்றர்  அகலத்தையும் 2 மீற்றர் உயரத்தையும் கொண்டது.

ஆனால், ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நெஹ்யானின் Hummer H1 X3 வாகனமானது அசல் Hummer H1 வானத்தைவிட மிகப் பெரியது.

இவ்வாகனம். 14 மீற்றர் (45.9 அடி) நீளத்தையும் 6 மீற்றர் (19 அடி) அகலத்தையும் 6.6 மீற்றர் (21 அடி) உயரத்தையும் கொண்டுள்ளது. இதன் உட்புற கொள்ளளவானது அசல் ஹம்மர் எச் 1 வாகனத்தைவிட 27 மடங்கு அதிகமாகும்.  முழுமையாக இயங்கக்கூடிய உலகின் மிகப் பெரிய ஹம்மர் வாகனம் இதுவாகும்.

இது இரு தளங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதல் தளத்தில் முழுமையாக இயங்கும் குளியலறையும் உள்ளது. மணித்தியாலத்துக்கு 32 கிலோமீற்றர் வேகத்தில் இவ்வாகனம் பயணம் செய்யக்கூயது.

அமெரிக்க இராணுவத்தின் LARC-LX ரக வாகனத்தின் செசி மீது ஷேக் ஹம்தானின் Hummer H1 X3 வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 டீசல் என்ஜின்கள் மூலம் இவ்வாகனம் இயக்கப்படுகிறது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe