Ads Area

மக்களைக் குழப்பி ஆட்சியைக் கைப்பற்றும் கனவு பலிக்காது - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஹமட் புர்கான்.

பாறுக் ஷிஹான்

நாட்டு மக்களை வேண்டுமென்று ஆவேசத்திற்குட்படுத்தி எதிர்கட்சித்தலைவர் வலையமைப்பில்லாத தொலைபேசியில் பேசுவது போன்று  தனது பேச்சுக்களைப்பேசி வருகின்றார்.

உண்மையில், வலையமைப்பில்லாத தொலைபேசியில் பேசினால் எவரிடமிருந்தும் பதில் கிடைக்காதென்பது எல்லோருக்கும் தெரியுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், கல்முனைப்பகுதியில் சனிக்கிழமை (9) இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமையைப் பயன்படுத்தி எதிர்கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எதிர்க்கட்சித் தலைவரும் அரசாங்கத்திற்கெதிரான விமர்சனங்களை தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர்.

எமது நாடு தற்போது நெருக்கடிகளை சந்தித்துள்ள சூழ்நிலையில், நாட்டு மக்களை வேண்டுமென்று ஆவேசத்திற்குட்படுத்தி எதிர்க்கட்சித்தலைவர் வலையமைப்பில்லாத தொலைபேசியில் பேசுவது போன்று  தனது பேச்சுக்களைப்பேசி வருகின்றார்.

உண்மையில் வலையமைப்பில்லாத தொலைபேசியில் பேசினால் எவரிடமிருந்தும் பதில் கிடைக்காதென்பது எல்லோருக்கும் தெரியும்.

உடனடியாக அரசாங்கம் தேர்தலொன்றினை நடத்த வேண்டும் அல்லது ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் கூறுவதானது. என்னப்பொருளாதார கொள்கையை முன்வைத்து இவ்வாறு கூறுகின்றார் என்ற ஆதங்கமே மிகப்பெரிய கேள்வியாக எழுகின்றது.

சஜீத் பிரேமதாச நாளை பதவியேற்றால் கூட அவர் கடல் நீரினைச் சுத்திகரித்து எரிபொருளினை வழங்குவதற்குரிய திட்டமொன்றினை முன்வைத்திருக்கின்றாரா? எனக்கேட்க விரும்புகின்றேன்.

மக்களை தற்போது உசுப்பேற்றுகின்ற எதிர்க்கட்சிகளின் செயற்பாட்டை நகைச்சுவையாகவே நாம் பார்க்க முடியும்.

வீணான விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கப் பார்கக்கின்றார்கள். இக்கால கட்டத்தில் நாட்டு மக்களுக்கு ஒன்றை ல்க்கூற விரும்புகின்றேன். இந்நிலை தொடர்ச்சியாக இடம்பெறப் போவதில்லை.

இதற்கான தீர்வினை அரசாங்கம் மிக விரைவில் முன்வைக்குமென்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. 

எதிர்கட்சியினர் தொடரச்சியாக விலையேற்றம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்துள்ள போதிலும் அதற்கான தீர்வுகளை முன்வைக்காமல் மக்களைக் குழப்பி ஆட்சியைக் கைப்பறற்றும் கனவில் இருக்கின்றார்கள். இக்கனவு பலிக்காதென்பதை அவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe