Ads Area

கல்முனையில் அரசுக்கு எதிராக போராட்டம் : ஆராதணையை தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ்தவ மக்கள். kalmunai

நூருல் ஹுதா உமர்

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக கல்முனை இருதயநாதர் ஆலயத்தின் முன்னால்  கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய  மின்சார தடை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.

பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கையுடன் இடம்பெற்ற இப்போராட்டமானது  கல்முனை இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன்  தலைமையில் இடம்பெற்றதுடன் நூற்றுக்கு மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். இதன் போது போராட்டகாரர்கள் விலைவாசியை சீராக்குங்கள், அரசியலை மீளாய்வு செய்யுங்கள், இறை நேசத்தை பெறுங்கள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள், நிர்வாகத்தை சரியாக செய்யுங்கள், விலை வாசியை குறையுங்கள் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் என அரசுக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe