ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவரின் கோரிக்கையை ஏற்று அவரின் 3 மாத குழந்தையை துபாய் காவல் துறையினர் தாயோடு சேர்த்து வைத்த சம்பவம் ஒன்று நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குற்றச் செயல் ஒன்றுக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஆபிரிக்க நாட்டு பெண் ஒருவர் தனது 3 மாத குழந்தையை சரியான முறையில் பார்த்துக் கொள்ள நம்பிக்கையான உறவினர்கள் யாருமில்லை எனவும் தனது குழந்தையை தன்னோடு சேர்த்து வைக்குமாறும் துபாய் காவல்துறையினை கோரியிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற காவலத் துறையினர் அப் பெண்ணிக் பிண்ணனி தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்து அவரது 3 மாத ஆண் குழந்தையை அவரோடு சேர்த்து வைத்துள்ளனர்.
இது தொடர்பில் துபாய் காவல் துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், குழந்தைகளை சிறைச்சாலைகளில் வைத்திருக்க அனுமதியளிக்கப்படுவதில்லை இருந்தும் தாய் தனது தண்டனையை அனுபவிக்கும் வரை குழந்தையை கவனித்துக் கொள்வதற்கு வெளியே குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாத போது கைதிகளின் குழந்தைகள் அவர்களோடு சேர்த்து வைக்கப்படுவார்கள். “கைதி தனது குழந்தையுடன் வந்தவுடன், அவர்கள் பல மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தேவையான தடுப்பூசிகளை வழங்குவதோடு, தகுந்த உணவு, தனிப்பட்ட மற்றும் சுகாதாரப் பொருட்கள் மற்றும் உடைகள் உட்பட குழந்தையின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார்கள்.
தாய் உளவியல் ரீதியாகத் தகுதியுடையவராகவும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளக்கூடியவராகவும் இருந்தால், பெண் கைதிகளின் குழந்தைகள் அவர்களின் தாய்மார்களோடு ஒதுக்கப்பட்ட கட்டிடத்தில் தங்கலாம் அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் சேவைகள் கூடுதலாக கிடைக்கும். மருத்துவ பராமரிப்புக்களும் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
சில பெண் கைதிகளால் அவர்களது குழந்தைகளை பராமரிக்க முடியாது போனாலும் அல்லது அவர்களது குழந்தைகளை வெளியில் பார்த்துக் கொள்ள அவர்களுக்கு உறவினர்கள் இல்லாது போனாலும் அவ்வாறான குழந்தைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி கட்டிடமான மகளிர் சிறைக் கூடத்தில் அனுமதி அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்கள்.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.