மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஆரையம்பதி பாலமுனை சந்தியில் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (17) மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா ரவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டியும் களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்த முச்சக்கரவண்டியும் ஆரையம்பதி பாலமுனை சந்தி வீதி வளைவில் சம்பவதினமான இன்று பகல் 12.30 மணியளவில் நேருக்கு நோர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை உடனடியாhக மட்டு போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
நன்றி - தினக்குரல் செய்திகள்.