Ads Area

புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஒவ்வொருவரினதும் விலை என்ன தெரியுமா? ஐக்கிய மக்கள் சக்தி தகவல்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார்.

ஐந்துபேர் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளன இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அவர்களிற்கு பணமும் பதவியும் வழங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பணம் பதவிகளை வழங்குவதற்காக  சிலர் அவர்களின் வீடுகளிற்கு சென்றுள்ளனர்-என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்களிற்கு 2மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது-அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவுசெய்ய முடியாத நிலையில் நாடு காணப்படுகின்ற நிலையில் இந்த பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மருந்துகள் இல்லாமல் 50க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் இறந்துள்ளனர் இது படுகொலை என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி - தினக்குரல்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe