சிலாபத்தில் “We want Gota” & “Go home Gota” ஆகிய இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு ஆதரவான “We want Gota” ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எதிரான “Go home Gota” குழுக்களுக்கும் இடையிலேயே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலேயே அரசாங்க சார்பு குழுவொன்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சிலாபத்தில் குவிக்கப்பட்டனர்.
அரச சார்பு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினால் இரண்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.