தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய துபாயில் புனித ரமலான் மாதத்தில் துபாய் மக்களிடம் அவர்களின் பெருந்தன்மையை பயன்படுத்தி 40,000 திர்ஹம் வரை பிச்சையெடுத்துள்ள பிச்சைக்காரர் ஒருவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் துபாய் பொலிஸார் தெரிவிக்கையில், புனித நோன்பு மாதத்தின் முதல் சில நாட்களிலேயே அவர் பிச்சையெடுத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு பொதுமக்களிடம் அனுதாபத்தினை காட்டி பிச்சையெடுத்த 178 பிச்சைக்காரவர்களை கடந்த மார்ச் 18 முதல் துபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிச்சைக்காரர்களை தொழில்முறைக்கு பயண்படுத்தும் கும்பல் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆட்களை ஐக்கிர அரபு இராஜ்ஜியத்திற்கு அழைத்து அவர்களை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் ஆகியோருக்கு ஆறு மாதங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும் என துபாய் பொலிஸ் எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பொதுமக்களை ஏமாற்றி நுாதன முறையில் பிச்சையெடுப்போர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பிச்சையெடுப்போர் தொடர்பில் 901 என்ற கண்டணமின்றிய தொலைபேசி இக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை தெரிவிக்கும்படி துபாய் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
அமீரகத்தில் தேவையுடைய ஏழை-எளியர்கள் இனங்காணப்பட்டு தொண்டு நிறுவனங்கள் ஊடாக அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.