Ads Area

கைவிட்ட மகன்கள்..! வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட மூதாட்டி! மண்ணை உண்டு வாழ்ந்த கண்ணீர் காட்சிகள்.

மகன்கள் இருந்தும், மண்ணை சாப்பிட்டு உயிர்வாழ்ந்த ஒரு பெண்ணின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தஞ்சாவூர் அருகே காவிரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், எலும்பும் தோலுமாக ஆடையின்றி ஒரு மூதாட்டி மண்ணை உண்பது போல் காட்சிகள் சோஷியல் மீடியாவில் திடீரென வேகமாக பரவியது.

மேலும் இந்த காட்சி குறித்து 1098 உதவி மையத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார்களும் அடுத்தடுத்து வந்தன.. இதனையடுத்து அங்கு வந்த சமூக நலத்துறையினர், சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து விசாரித்துள்ளனர்.

அந்த பாட்டியின் பெயர் ஞானஜோதி.. 62 வயதாகிறது என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், திருமணமாகி அவருக்கு 3 பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது... இதில், மூத்தமகன் சென்னையில் காவல் ஆய்வாளராகவும், இளைய மகன் பொதிகை தொலைக்காட்சியிலும் வேலை பார்த்து வருகிறாராம்.. ஒரே ஒரு மகள் இருந்தார். ஆனால், அவரும், கணவரும், 10 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்..

இப்போதைக்கு இந்தம்மாவுக்கு 2 மகன்கள் மட்டுமே நிலையில், 2 பேருமே இவரை கவனிக்காமல் கைவிட்டுள்ளனர். அந்த மகன்களும் ஒருவருக்காருவர் பேசிக் கொள்வதில்லையாம்.. சொத்து பிரச்சினை தான் காரணம்.. அதனால், ஆளுக்கு ஒரு பக்கம் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.. மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா வீட்டில் வைத்து பூட்டி வைத்திருக்கிறார்கள்.. இதுகுறித்து அருகில் இருப்பவர்கள் சொல்லும்போது, கடந்த 10 வருடமாக பாட்டியின் நிலை இப்படி தான் இருக்கிறது என்கிறார்கள்..

வாரத்திற்கு ஒரு முறை அவரது மகன்கள் வந்து பிஸ்கட் வாங்கிட்டு வருவாங்களாம்.. ஆனால் உள்ளே வராமல், கேட் வழியாகவே பிஸ்கட் பாக்கெட்டை தூக்கி வீசி விட்டு போய்விடுவார்களாம்.. இதை பற்றி அக்கம்பக்கத்தினர் கேட்டால், சண்டைக்கு வந்துவிடுகிறார்கள் என்பதால், அனைவருமே அமைதியாகி விட்டோம் என்று வேதனையுடன் சொல்கிறார்கள்..அதனால், அந்த மகன்கள் வராத நாட்களில் எல்லாம், அந்த பகுதி மக்கள்தான் அடிக்கடி சாப்பாடு தந்து வந்திருக்கிறார்கள்..

சில சமயம், தண்ணீர், சாப்பாடு எதுவும் இல்லாவிட்டால் பசிக்கு, கீழே கிடக்கும் மண்ணை அள்ளி அந்தம்மா சாப்பிடுவாராம்.. அந்த காட்சி தான் வீடியோவாக வெளிவந்து பரவிவிட்டது.. இந்த வீடியோ கலெக்டர் பார்வை வரை சென்றதையடத்து, முதலுதவி வழங்க உத்தரவிட்டார்... அதுமட்டுமல்ல, அந்த 2 மகன்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.. இதனையடுத்து காவல்துறை உதவியுடன் வந்த சமூக நலத்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து பாட்டியை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

இதெல்லாம் கேள்விப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு மூத்த மகன் வந்தார்.. அப்போது அவரிடம் இதை பற்றி கேட்டதற்கு, "சொத்தையும், பென்சன் பணம் 30,000 ரூபாயும் தம்பி எடுத்து கொண்டான்" என்று புலம்பினாரே தவிர, பெற்ற தாயை பற்றி வாயே திறக்கவில்லை.. அம்மாவின் நிலைமை பற்றி வேதனை தெரிவிக்கவுமில்லை.. ஒருவர் உயிரிழந்தால், அவர்கள் உடலை மண்ணை தின்னும் என்பது இயற்கை.. ஆனால், உயிருடன் இருக்கும்போதே மண்ணை திண்ணும் பரிதாபத்தை என்னவென்று சொல்வது? 2 மகன்களை பெற்று வளர்த்தும், இப்படி ஒரு கொடுமை, எந்த தாய்க்கும் வரக்கூடாது..!

இப்படி கடந்த வருடம் கேரளாவிலும் ஒரு சம்பவம் நடந்தது.. பெற்ற அப்பா - அம்மாவுக்கு சோறு போடாமல், தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதையும் செய்துள்ளார் அவர்களது மகன்.. இதன்விளைவு, அந்த அப்பா பட்டினியால் துடிதுடித்து இறந்தே போய்விட்டார்.. பல நாட்களாக உணவு சாப்பிடாததாலும், பசியால் அவர் ஏற்கனவே சுயநினைவு இழந்து மயங்கி கிடந்ததும், அதனாலேயே அவர் உயிர் பிரிந்துள்ளதும் தெரியவந்தது.. ஆபத்தான நிலையில் அம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. இந்த சம்பவத்தினால் கேரளாவே வெவெலத்து போனது.

இப்படித்தான் நம்ம ஊரிலும், கடந்த வருடம் சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. பெற்ற மகன் சாப்பாடு போடாததால், பசியால் வயதான தம்பதி இருவரும் தற்கொலையே செய்து கொண்டனர்.. அதற்கு முன்பு போலீஸுக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தனர்.. "இறந்த பிறகு, நாங்கள் பெற்ற 3 மகன்களும் எங்களுக்கு கொள்ளி போடக்கூடாது, போலீசார்தான் எங்களுக்கு கொள்ளி வைக்க வேண்டும்" என்று எழுதி வைத்துவிட்டு இறந்தே போய்விட்டனர்.

ஆக, பிள்ளைகள் வளர்ந்து சாப்பாடு போடுவார்கள் என்று பெற்றோர்கள் மலை போல நம்பிக் கொண்டிருந்தது எல்லாம் அந்த காலம்.. பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும் சரி, "சுயநலம்" தலைதூக்கிவிடுகிறது.. "பசி"யோ அனைத்தையும் வென்றுவிடுகிறது..!

tamil.oneindia.com




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe