Ads Area

இருபதுக்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட வேட்புமனு வழங்கக்கூடாது.

இருபதுக்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட வேட்புமனு வழங்கக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

கடந்த பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி சார்பாக போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகளின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டனர்.ஆனால் அவர்களின் கட்சி தலைவர் மட்டும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் உள்ளனர்.

ஆனால் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவர்களால் எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் எமது வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்று எமது கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்த இவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட வேட்புமனு வழங்கக்கூடாது என எமது கட்சி ஆதரவாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் கிழக்கிற்கு விஜயம் செய்த எமது கட்சியின் செயலாளரும் இதே முடிவிலயே உள்ளார். இலங்கை வாழ் முஸ்லிம்களின் நிலைப்பாடும் இவ்வாறே உள்ளது என நினைக்கிறேன்.

ஆகவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால செயற்பாடுகள் எதிலும் இணைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe