ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான சமிந்த லக்சான் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமநை்தமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருந்தது,
இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு கேகாலை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.