Ads Area

பத்தரமுல்லை மற்றும் களனி பிரதேசங்களில் நேற்று (26) இரண்டு கொலைச் சம்பவங்கள்.

பத்தரமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கும் பிச்சைக்காரன் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர் பல்பொருள் அங்காடியில் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் சந்தேக நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதையடுத்து சந்தேக நபர் கூரிய பொருளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். உயிரிழந்தவர் மாலபே பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, களனி, வராகொட பிரதேசத்தில் உள்ள 63 வயதுடைய நபர் ஒருவரும் அவரது மகனும் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலினால் மூத்த பிரஜை உயிரிழந்துள்ளதுடன், மகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரையும் தாக்கிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்த தங்க நகைகள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe