நூருள் ஹுதா உமர்
இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன்ள நேற்று மாலை முதல் ஊரடங்குச்சட்டம் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் ஊரடங்குச் சட்டத்தை அனுசரித்து வருகின்றனர்
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான கல்முனை காரைதீவு சாய்ந்தமருது நிந்தவூர் சம்மாந்துறை அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளதுடன் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன
இதேநேரம் இன்று சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் டீசல் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கொண்டு இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.