Ads Area

ஐ.என்.ஆர் கிரிக்கெட் வெற்றிக்கிண்னத்தை சம்மாந்துறை விளையாட்டு கழக அணி சுவீகரித்தது.

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறையில் அமைந்துள்ள ஐ.என்.ஆர் மோட்டார் வாகன உதிரிப்பாக  நிறுவனத்தின் 12 வருட காலபூர்த்தியை முன்னிட்டு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றினை  முழு அனுசரணையுடன் சம்மாந்துறைகவுண்டி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) சம்மாந்துறை  பொது விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.

இச் சுற்றுப்போட்டி ஆனது அம்பாறை மாவட்டத்தில் உள்ள பலம் பொருந்திய 14 அணிகள் கலந்துகொண்டது.

இறுதிச்சுற்றுப்போட்டி  நியூவ்  சண் விளையாட்டு கழக சம்மாந்துறை அணிக்கும்  சம்மாந்துறை விளையாட்டு கழக அணிக்கும்  இடையே நடை பெற்றது.

இறுதிச்சுற்றுப்போட்டியில் நேரத்தை கவனத்தில் கொண்டு 4 ஓவர்கள் ஒர் ஓவரில் 4 பந்துகள்  மொத்தமாக20 பந்து வீச்சுக்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை விளையாட்டு கழக அணி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் வெற்றி இழக்காக  நியூவ்  சண்  விளையாட்டு கழக சம்மாந்துறை அணிக்கு 35 ஓட்டங்கள் வெற்றியிழக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ஐ.என்.ஆர்  நிறுவனத்தின்  உரிமையாளர்  எம்.எச் நூர் முஹம்மட் கலந்துகொண்டதுடன் அதிதியாக சம்மாந்துறை இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் கலந்துகொண்டார்.

இச் சுற்றுப்போட்டியை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் பலர் திரண்டிருந்தனர்.

துடுப்பெடுத்தாடிய  நியூவ்  சண் விளையாட்டு கழக சம்மாந்துறை அணி  4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 27ஓட்டங்களை பெற்றது.

சம்மாந்துறை  விளையாட்டு  கழக அணி 7 ஓட்டங்களினால் வெற்றியை தமதாக்கி கொண்டது.

இத் தொடரில் வெற்றியீட்டிய சம்மாந்துறை விளையாட்டு கழக அணிக்கு 10000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதோடு நியூவ் சண் விளையாட்டு கழக சம்மாந்துறை அணிக்கு 5000 ரூபாயும் வெற்றிக்கிண்னமும் வழங்கப்பட்டது.

இத் தொடரின்  போட்டியின்  ஆட்ட நாயகனாக சம்மாந்துறை  விளையாட்டு  கழக அணி வீரர் ரமீஸ்வும் , தொடரின் ஆட்ட நாயகனாக சம்மாந்துறை  விளையாட்டு  கழக அணி வீரர் இஸ்மத்வும்  தெரிவுசெய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe