Ads Area

மக்களின் நம்பிக்கையை இழந்தவர்கள் பதவி விலக வேண்டும்! மஹேல.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் சிலர் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டனர், எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றில், இந்த பிரச்சனைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும், சரியான, தகுதி வாய்ந்தவர்களால் மாத்திரமே இதனை சரி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

நாட்டிற்கு நம்பிக்கையையும் நம்பிக்கையையும் கொடுக்க ஒரு நல்ல குழு தேவை. நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. தேவையற்ற காரணங்களை கூறாமல், சரியானதைச் செய்வதற்கான நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமுல் செய்யப்படுள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை கண்டு தாம் வருத்தமடைவதாக குறிப்பிட்டுள்ள அவர், போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உள்ள முழு உரிமையை அரசாங்கம் புறக்கணிக்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

போராட்டம் செய்பவர்களைக் காவலில் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தநிலையில் நாட்டு மக்களை, துன்பங்களில் ஒற்றுமையாகப் பாதுகாக்க இங்கு பாரிய அவசரம் உள்ளது," என்று மஹேல தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe