Ads Area

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்போரும், நடுநிலை வகிப்போரும் மக்கள் மன்றங்களில் துகிலுரியப்படுவார்கள். Mano Ganesan

சம்மாந்துறை அன்சார்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதும், நடுநிலை வகிப்பதும் ஒன்றே..! என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

225 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. ஏனைய எதிர்கட்சிகளை சேர்த்தாலும் பெரும்பான்மை இல்லை. இது எமக்கு தெரியும் இது  ஒன்றும் பரம இரகசியம் அல்ல. 

எனினும் இதை சபையில் வாக்கெடுப்புக்கு நாம் கொண்டு வருவோம். அப்போது நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் யாரென அறியும் வாய்ப்பு வருகிறது. 

இன்று தெற்கு, மலையகம், மேற்கு, வடக்கு, கிழக்கு என நாடு முழுக்க அரசை எதிர்த்து போராடும் மக்கள், தாங்கள் வாக்களித்து தெரிவு செய்த எம்பீக்களின் இலட்சணங்களை அறிய அரிய வாய்ப்பு வருகிறது. 

எதிர்போரும், நடுநிலை வகிப்போரும் மக்கள் மன்றங்களில் துகிலுரியப்படுவார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe