மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவையில் அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று, சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.