Ads Area

13 வயது சிறுமியின் வன்புணர்வு வீடியோ : 10 இலட்சம் கப்பம் கோரிய இருவர் கைது : ஒருவர் துபாய்க்கு தப்பியோட்டம்.

பாறுக் ஷிஹான்

13 வயது சிறுமியை வன்புணர்விற்குட்படுத்தி வீடியோவினைக்காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2022.01.05ம் திகதியன்று சிறுமியின் தாயாரினால் அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது பகுதியைச்சேர்ந்த 13 வயதான தனது மகளை 3 சந்தேக நபர்கள் வீடியோ காணொளியொன்றினை முன்வைத்து கப்பம் கேட்பதாக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பொலிஸார் 3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்ட நிலையில், தேடுதல் மேற்கொண்டு வந்தனர்.

எனினும், சந்தேக நபர்களில் ஒருவரான சாய்ந்தமருது 3 ஐச்சேர்ந்தவர் டுபாய் நாட்டிற்கு தப்பிச்சென்ற நிலையில், ஏனைய சந்தேக நபர்களில் கப்பம் கோரியவரான மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் கல்முனைப்பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட 31 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபர் சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைதானார்.

குறித்த இரு சந்தேக நபர்களையும் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாகச் செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற சந்தேக நபரைக்கைது செய்ய நீதிமன்ற நடவடிக்கையூடாக சர்வதேச பிடியாணை உத்தரவினைப் பெறுவதற்கு எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைதான சந்தேக நபர்கள் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது. 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe