மக்களுக்கு வரிகள் நீக்கினால் அந்த நேரம் சுவையாக இருந்தாலும் பிற்காலத்தில் கசப்பை சுவைக்கவேண்டிவரும் என்பதை இலங்கை மக்கள் இந்த அரசாங்கத்தின் மூலமாக அனுபவம் பெற்றுள்ளார்கள்.
திட்டமிடப்படாத முறையில் கண்மூடித்தனமாக குறைத்த அரச வரிகளின் தாக்கமும் இன்று இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்றாகும். இன்று அரசுக்கு எதிர்த்து போராடும் அதே மக்கள் இரண்டு வருடங்களுக்கு முன் "அபே விருவா" பாட்டுடன் பாற்சோறும் சாப்பிட்டு மகிழ்ந்தனர் என்பதை நாம் யாவரும் அறிவோம்.
அது மட்டுமல்ல அரசின் சரியான பொருளாதார கொள்கையும் முகாமைத்துவமும் இல்லாத காரணத்தால் வெளிநாட்டு கப்பல்களுக்கு வந்திகொடுக்க நேரிட்ட விடயமும் நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் உரம் மற்றும் மசகு எண்ணை கப்பல்களுக்கு பாரிய அளவில் நஷ்ட ஈடு damarages வழங்கப்பட்டமையும் ஒரு காரணம்.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய அளவு வீழ்ச்சிக்கு அரசின் அனைவரும் ஊழல்வாதிலாகவே காணப்பட்டதும் ஒரு பிரதான காரணமாக இருக்கின்றது.
தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்வது என்பது ஒரு பாரிய சவாலாகவே இருக்கின்றது. இதற்கான வழிகளை நாம் அனைவரும் நாட்டு பிரஜைகள் என்ற ரீதியில் குடும்ப மட்டத்தில் இருந்து சில காலங்களுக்கு பொருமையோடு இருந்து சீர் செய்யவேண்டும் என்பது எனது கருத்து.
முஸம்மில் மொஹிதீன்
தலைவர்
தேசிய விடுதலை மக்கள் முன்னணி NLPF