(எம்.என்.எம்.அப்ராஸ்,சர்ஜுன் லாபிர் )
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று (06) மதியம் வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதார சேவையில் நிலவும் குறைபாடுகள்,மருத்துவப் பொருட்களுக்கான தட்டுப்பாடு,வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்குவதற்குரிய போதிய மருந்துகள் இன்மை, மின்வெட்டு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும் பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் தங்குதடையின்றி இடம்பெற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி வைத்தியசாலையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார சேவைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்காதே,களவை நிறுத்து மருந்தை வழங்கு, அரசின் மோசமான நிதி நிர்வாகம்; அத்தியாவசிய மருந்துகள் இல்லை;மனித உயிர்கள் ஆபத்தில்!, மருந்துகள் இல்லை சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது,வேண்டாம் வேண்டாம் ஊழல் அரசு ,அரசே மக்கள் பணத்தை வீணடிக்காதே,
ஆகிய வசனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை வெளிப்படுத்தி தமது எதிர்ப்பினை வெளியீட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.