அபுதாபி நகரின் அழகை சிதைக்கும் வகையில் குடியிருப்புப் பகுதியின் பால்கனிகளில் துணிகளை கழுவி அவற்றினை காயப் போடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அதற்கு 1000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி நகர முனிசிபாலிட்டி குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய குடியிருப்பாளர்கள் நகரத்தின் அழகியல் தோற்றத்தை பராமரிக்க வேண்டும் என்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டுள்ளது.
குடியிருப்பாளர்கள் தங்கள் ஆடைகளைத் பால்கனிகளில் தொங்கவிடுவதைத் தவிர்த்து எலக்ட்ரானிக் துணி உலர்த்திகள் மற்றும் துணி உலர்த்தும் ரேக்குகள் போன்ற சரியான மாற்று நவீன சலவை-உலர்த்தும் நுட்பங்களைக் கடைப்பிடிக்குமாறும் நகர முனிசிபாலிட்டி வேண்டிக் கொண்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.