தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவிற்கு உம்ரா கடமையை நிறைவேற்ற வரும் வெளிநாட்டினர் மக்கா-மதீனா-ஜித்தா தவிர்ந்த ஏனைய இடங்களுக்கும் செல்ல முடியுமா என பலரும் என்னிடம் கேட்கின்றனர்.
ஆம்..!! நிச்சயமாக செல்ல முடியும் அதற்கு தற்போது தாரளமாக அனுதியுள்ளது. சவுதி அரேபியாவிற்கு உம்ரா கடமைக்காக வருவோர் அவர்களது விசா செல்லுபடியாகும் காலப்பகுதியில் சவுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் தாரளமாக செல்ல முடியும் அதில் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது.
இதற்கு முன்னர் உம்ரா கடமைக்காக வெளிநாடுகளிலிருந்து வருவோர் மக்கா-மதீனா மற்றும் ஜித்தா போன்ற உம்ராக் கடமையோடு தொடர்பான இடங்களுக்கு மாத்திரமே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர் தற்போது அந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உம்ராவுக்கு வருவோர் சவுதியில் உள்ள சகல இடங்களையும் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உம்ரா கடமைக்காக வருவோரது விசாக் காலம் 30 நாட்கள் மாத்திரமே செல்லுபடியாகும் அதனால் குறித்த 30 நாட்களுக்குல் அவர்கள் உம்ராக் கடமையினை நிறைவேற்றி விட்டு விரும்பினால் சவுதியில் உள்ள பல இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியும் அதற்கு எந்த தடையும் இல்லை.