தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஸ்வீடனில் உள்ள லிங்கோபிங், நோர்கோபிங் மற்றும் பிற நகரங்களில் நடைபெற்று வரும் இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது புனித குர்ஆனின் பிரதிகளை சிலர் எரித்தமைக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் ஹிஸைன் பிரஹிம் தாஹா இது தொடர்பில் தெரிவிக்கயைில், ஸ்வீடனில் டேனிஷ் வலதுசாரி கட்சி ஸ்ட்ராம் குர்ஸால் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகள், தீவிர வலதுசாரி போக்கை கடைப்பிடித்து ஆபத்தான போக்கைப் கடைப்பிடித்து வருகின்றமை உலக முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
புனித அல்-குர்ஆனை எரித்த நிகழ்வானது இனவெறி மற்றும் மதவெறி மனப்பான்மையை தெளிவாக வெளிப்படுத்துவதாகவும், அவர்களின் நடவடிக்கை நாகரீக சமூகத்திற்கு எதிரானதாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய துஷ்பிரயோகங்களும், காட்டுமிராண்டித்தனமான நடத்தைகளும் புனித குர்ஆனின் கண்ணியம் மற்றும் புனிதத்தன்மையை பாதிக்காது அவர் தெரிவித்துள்ளார்.