தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை இன்று சிலரால் உடைக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்சே சகோதரர்களான மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை ஆவார்.
கொழும்பில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் நாடு பூராகவும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றனது, இந் நிலையில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையின் சிலையும் உடைத்து கீழே வீழ்த்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நாளை வரை அமுலில் உள்ள போதிலும் இந்த சம்பவம் இலங்கையில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.