Ads Area

ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கினால் ஆறு மாத காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயார்.

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் அராஜகத்தை தீர்ப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கினால் ஆறு மாத காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அதனை தீர்க்கும் பொறுப்பை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும், தற்போது பிரதமர் இல்லாத நிலையில் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் என்பதே தமது முதன்மையான நிபந்தனை என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு NPP க்கு ஆதரவளிக்க ஏனைய கட்சிகள் தயாராக இல்லை என்றால், இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என்றார்.

“நாடாளுமன்றத்தில் எங்களுக்கு மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எவ்வாறாயினும், இந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மையை சமாளித்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் வரையில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று அவர் கூறினார்.

மக்களின் விருப்பத்துடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று திரு.திஸாநாயக்க கூறினார். 

செய்தி மூலம் - https://www.dailymirror.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe