பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் தற்போது பாராளுமன்றத்தில் எந்தப் பக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் என்பது தெரியாதுள்ளது என தெரிவித்துள்ளார்.
இன்று சபையில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் தன்னால் பங்கேற்க முடியாது எனவும், ஆளும் கட்சியின் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
"நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படுவதை தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம் அதுவல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது என்று பிரதமர் விக்ரமசிங்க கூறினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.