ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்கள் இன்று கொழும்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் இன்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள “மைனா கோ கமா” மற்றும் காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கமா’ ஆகிய இரண்டு போராட்ட தளங்களையும் அழித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார, தங்களது அடிப்படை தேவைகள் மற்றும் உரிமைகளை கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள், அரசாங்கத்தில் உள்ள குண்டர்களால் தாக்கப்பட்டமையானது “அருவருப்பானது. இது அரச ஆதரவு வன்முறை. வேண்டுமென்றே திட்டமிடப்பட்டது,” என்று ட்வீட் செய்துள்ளார்.
இந் நிலையில் நிதானத்தை கடைப்பிடிக்குமாறும், வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுமாறும் நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது,” என்று பிரதமர் ட்வீட் செய்திருந்தார். பிரதமர் மகிந்த ராஜபக்ச பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த சங்கக்கார, பிரதமரின் கருத்தை கடுமையாக சாடி பதில் டுவிட் போட்டுள்ளார்.
அவரது கருத்துக்கு பதிலளித்த சங்கக்கார, "உங்கள் "ஆதரவாளர்களாலும் குண்டர்களாலும் மட்டுமே வன்முறை நிகழ்த்தப்பட்டது - அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த போராட்டக்காரர்களைத் தாக்குவதற்கு முன் அந்தக் குண்டர்கள் முதலில் உங்கள் அலுவலகத்திற்கு வந்தவர்களே என கோபத்துடன் பதில் டுவிட் செய்துள்ளார்.