Ads Area

கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிருவாகிகள் தெரிவும் ...!

 (எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த  பொதுக்கூட்டம் அமைப்பின் அதன் தலைவர் வைத்திய கலாநிதி எம்.எச். ரிஸ்பின் அவர்களின் தலைமையில் கல்முனை காரியாலயத்தில்(29)ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இவ்வாண்டிற்கான ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சமூகமளித்த அமைப்பின் அங்கத்தவர்களின் ஏகோபித்த தீர்மானத்தின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டிற்கான கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவராக வைத்தியர் எம்.எச்.எம்.ரிஸ்பின், செயலாளராக எம்.எம்.எம். காமில்,பொருளாளராக எம்.ஐ.எம்.நிசாமுதீன்உப தலைவர்களாக கலாநிதி. எம்.பீ.எம். இர்சாத் எஸ்.எச்.எம்.சமீம்,உப செயலாளராக எஸ்.எல்.எம். இப்ராஹிம்,கணக்குப் பரிசோதகராக ஏ.எல்.ஏ.மஜீத் நலன்புரி செயலாளராக மௌலவி.எஸ்.அப்துல் சமத் நிதியியல் ஒருங்கிணைப்பாளராக எம்.எம்.சமிலுலிலாஹி,ஆகியோர் அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய  நிருவாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பானது கல்முனை பிராந்திய வாழ் சமூகத்திற்கான தனது சேவைக் காலத்தில் 8 வருடங்களை கடந்திருப்பது ஒரு மைல் கல்லாகும்.

இவ்வமைப்பானது கல்முனைப் பிராதியத்தின் சிவில் சமூக, கல்வி, வாழ்வாதார மற்றும் தொழிசார் அபிவிருத்தித்செயற்திட்டங்களை பலவற்றை வெற்றிகரமாக செயற்படுத்தியதுடன் தற்போதய நிலையில் பல்வேறுபட்ட கல்வி,ஜீவனோபாய அபிவிருத்தி பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அற்பணிப்புடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe