தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் சுற்றுலாத் துறையினை ஊக்கப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பதற்காக மது பாவனைகளை ஒரு போதும் அனுமதிக்காது என சவுதி அரேபிய இளவரசியும் சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை உதவி அமைச்சருமான ஹைஃபா பின்த் முகமது தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் உருவாகி வரும் மிகப் பிரம்மாண்ட வேலைத்திட்டமான NEOM தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மது பாவனை தொடர்பில் சவுதி அரேபியாவும், மன்னர் சல்மானும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் மதுபாவனைகளை அனுமதித்து சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்கம் சவுதி அரேபியாவிற்கு கிடையாது என்றும், தற்போது சவுதி அரேபியாவின் சுற்றுலாத் துறை சிறப்பான முறையில் இயங்குவருவதாகவும், சவுதி அரேபியாவிற்கு உலகின் பல்வேறு நகரங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தவண்ணமிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.