பாராளுமன்றத்தில் இடம் பெற்ற பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பில் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச 31 வாக்குகள் பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (SLPP) சார்பில் ராஜபக்சே பரிந்துரைக்கப்பட்டு 109 வாக்குகள் பெற்றார். அஜித் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை எதிர்த்து போட்டியிட்யிட்டிருந்தார்.
ரோஹினி கவிரத்ன சஜித் அணியான சமகி ஜன பலவேகய (SJB) யால் பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் அவரால் 78 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலால்பிட்டிய இரண்டாவது தடவையாக பதவி விலகியதையடுத்து அந்த பதவி வெற்றிடமாக இருந்ததை அடுத்து புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என யோசனை தெரிவித்திருந்த போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்த யோசனையை மீறி அஜித் ராஜபக்சவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தது.
வாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்ட போதிலும், இரகசிய வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் தீர்மானித்தார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.