தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய துபாயில் சாரதியாக பணிபுரிந்து வந்த ஆசிய நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த சாரதி ஒருவர் தனது முதலாளியில் 8 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 5 மில்லியன் பணத்தினை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாது,
ஐக்கிய அரபு அமீரக துபாயில் சாரதியாக வேலை பார்த்து வந்த நபர் ஒருவர் தனது நண்பர்கள் சகிதம் தனது முதலாளியின் வீட்டுக்குல் நுழைந்து அவரது 8 மாத குழந்தையினை துாக்கிக் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி அவர்களிடமிருந்து பணம்-நகைகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியின் சாவியை பெற்றுக் கொண்டு அந்தப் பெட்டியிலிருந்து 2 மில்லியன் திர்ஹம் பணம் மற்றும் 3 மில்லியன் திர்ஹம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கொள்ளையிட்ட பணத்தையும், நகைகளையும் எடுத்துக் கொண்டு நாடு செல்ல முற்பட்ட வேளையில் அவர்களை துபாய் காவல் துறையினர் விரைந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
துபாய் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளுக்கு வீட்டுக்குல் அத்துமீறி நுழைந்தமை, குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டியமை, கொள்ளையிட்டமை ஆகிய குற்றங்கள் புரிந்தமைக்காக அவர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனையும் 6 மில்லியன் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.