RAWLA விளையாட்டுகழகம் நடாத்திய உலமாக்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது..
இவ் மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டியில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான ஐ.எல்.எம் மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு கேடயம் பணப்பரிசு ஆகியன ஐ.எல்.எம் மாஹிர் BSc. அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது
இந் நிகழ்வில் உரையாற்றிய ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள், சம்மாந்துறை மண் வீரர்கள் அண்மைக்காலமாக உள்ளூரில் மாத்திரமின்றி வெளி ஊர்களிலும் தமது திறமையை வெளிகொண்டு பல வெற்றிகள் மூலம் எம் மண்ணை விளையாட்டுதுறையிலும் பிரகாசிக்க செய்கின்றனர்
பல திறமையான வீரர்களை கொண்ட எமதூரில் போதியளவு வளம் இருந்தும் அதனை பயன்படுத்தகூடிய நிலையை ஏற்படுத்தி கொடுக்காமல் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்ய தவறி இருக்கின்றனர்
குறிப்பாக கடினபந்து விளையாடுவதற்கோ பயிற்சியில் டுபடுவதற்கோ மைதானம் ஒன்றுகூட இல்லாததை நினைத்து கவலையடைகின்றேன். பயிற்சி மேற்கொள்வதற்காக அயல் பிரதேசங்களுக்கு சென்று எமதூரின் தலை சிறந்த கழகங்கள் பயிற்சியை மேற்கொண்டு பல வெற்றிகளை சுவீகரிக்கும் வரலாற்றை காண்கின்றேன்.
இன்ஷாஅல்லாஹ் என்னிடம் போதியளவு அதிகாரம் கிடைக்கபெறும்போது எமதூர் இளைஞர்களுக்கு போதிய அளவு வளங்களை ஏற்படுத்தி கொடுப்பேன் என்று இவ்விடத்தில் உறுதிபட கூறுகின்றேன்
இது போன்ற பல தொடர்கள் நடைபெற வேண்டும்.அப்போதுதான் பல எம்மில் மறைந்திருக்கும் பல திறமை வாய்ந்த வீரர்களை வெளிகொனருவதற்கான சந்தர்ப்பமாக அமையும்.இத்தொடரை வெற்றிகரமாக நடாத்திமுடித்த RAWLA விளையாட்டு கழகத்திற்கு எனது நன்றி மற்றும் பாராட்டையும் தெரிவிக்கின்றேன்
-ஊடக பிரிவு-