லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) பஸ் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி பஸ் கட்டணங்கள் 25% – 30% வரை அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். புதிய பஸ் கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும் என விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததை அடுத்து இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அல்லது மாதத்திற்கு ஒருமுறை இந்த சூத்திரம் பயன்படுத்தப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் மேலும் கூறினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk