தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் மதுபான தொழிற்சாலை நடாத்தி வந்த குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குவைத்தின் அகமதி பகுதியில் மதுபான தொழிற்சாலையை நடத்தி வந்த 5 பேர் குவைத் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து விற்பனைக்கு தயாராக இருந்த 500 மதுபாட்டில்கள் மற்றும் மதுபானம் காய்ச்சும் கறிவுகள், உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் வேளை ஆசிய நாடுகளில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தற்போது குவைத் பொலிஸார் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.