பாறுக் ஷிஹான்
மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி திருட்டு, கடைகள் உடைப்பு அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.
இவ்வறிவுறுத்தலானது, சாய்ந்தமருது பள்ளிவாசல்களிலுள்ள ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்றிலிருந்து சாய்ந்தமருது பகுதியில் தற்காலிகமாக வாடகை அடிப்படையில் தங்கியுள்ள அனைவரையும் தத்தமது அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறுm அவர் கேட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக அதிகளவான மோட்டார் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு, கடை உடைப்புக்கள் இடம்பெற்றுள்ளதுடன், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த திருட்டு சம்பத்தில் ஈடுபடுபவர்கள் அனேகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.