Ads Area

அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக டீ.மோகனகுமார்.

 (சர்ஜுன் லாபீர்) 

அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.பாக்கியராஜ அண்மையில் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு பணிப்பாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்றுச்சென்றதையடுத்து  திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தினைச்சேர்ந்த டீ.மோகனகுமார் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில் இப்பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதோடு நாவிதன்வெளி, திருக்கோவில், கல்முனை, அம்பாறை போன்ற பிரதேச செயலகங்களில் உதவி, பிரதித்திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எதிர்வரும் 27ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என்பதுடன், இவர் ஒரு சிறந்த ஆளுமை கொண்ட நிர்வாக அனுபவமுள்ள ஒரு அதிகாரியாவார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe