Ads Area

மாணவா்கள் சக்தி மீது இந்த ஜனாதிபதியோ பாதுகாப்புப்படையினரோ முட்டிக் கொள்ள வேண்டாம் - அனைத்து பல்கழைக்கழக மாணவா்கள் ஒன்றியத்தின் தலைவா்.

காலிமுகத்திடலில் நடைபெறும் மக்களது போரட்டத்திற்கு பல்கழைக்கழக மாணவா்கள் ஒன்றியம் தம்மால் செய்யக் கூடிய சகல ஒத்துழைப்பினையும் வழங்குவோம்.  

மாணவா்கள் சக்தி மீது இந்த ஜனாதிபதியோ பாதுகாப்புப்படையினரோ முட்டிக் கொள்ள வேண்டாம். எங்களது சக்தி மாபெரும் சக்தி . முற்று முழுதாக நாங்கள்  போரட்டத்திற்கு இறங்கினால் உங்களால் சமாளிக்க முடியாது போகும்.  எங்களுக்கு வீதித் தடைகள் பெரிதல்ல  தடையை 5 நிமிடத்தில் எங்களது சக்தியை பாவித்து அகற்றினோம்.  இநத நாட்டின் ஊழல்மிக்க ஜனாதிபதி, .அத்துடன் இவா்கள்  செய்த சகல  ஊழல்களையும் களவுகள் அரச சொத்துக்களும் அபகரிப்பு போன்ற விடயங்கள் சகலதும்  விசாரிக்கப்பட்டு அவர்களுக்குரிய  தண்டனைகள் வழங்கப்படல் வேண்டும்.  அத்துடன் வா்களது சொத்துக்கள் அரசுடைமையாக்குதல் வேண்டும்.  

அவா்களை இந்த காலிமுகத்திடலில் கொண்டுவந்து நிறுத்துவோம்.

இந்த மக்கள் போரட்டத்திற்காகவே நாங்கள் ஆரப்பாட்டத்தில் இறங்கியுள்ளோம். அதனை விட்டு பாராளுமன்றத்தில் உள்ள 225 பேர்களது  காற்சட்டைப் பைகளை நிரப்புவதற்கு அல்ல, எமது அமைப்பு கோட்டாராஜபகசவுக்கோ, சஜித் பிரேமதாசாவுக்கோ, ஜே.வி.பிக்கோ 

எமது ஆதரவு இல்லை. மக்கள் கஸ்டப்படுகின்றனா். எங்களது தாய் தந்தை சகோதரிகள் அன்றாடம் உணவுக்காகவும், கேஸ், எரிபொருளுக்காகவும்  மிண்சாரம்  பொருட்களின் விலை ஏற்றத்திற்காகவும் நாளாந்தம் கஸ்டத்தினை எதிா்நோக்குகின்றனா். ஆகவே தான் இந்த நாட்டின் ஜனாதிபதி உடன் பதவி விலகல் வேண்டும்.  மக்களது போராட்டத்திற்கு  அரசியல் சாயல் பூசிக் கொள்ள வேண்டாம். 

இந்த ஜனாதிபதி முதலில் பதவி விலகு மட்டும் எங்களது போரட்டம் தொடரும்.  அவரது அரன்களை 5 நிமிடத்தில் எங்களலாள் அகற்ற முடியும் ரஜபக்ச கூட்டத்தினரையும் அவா்கள் சாா்ந்த அனைவரையும் .  விமான நிலையங்களை தரைவழிப் பாதைகளை நாங்கள் மூடிவிடுவோம்.  அவா்கள் தப்பிக்க முடியாது. 

அத்துடன் இந்தத் ஊழல் தலைவா்கள்  செய்த கொலைகள்  -  பல்கலைக்கழக மாணவா்கள், ஊடகவியலாளா்கள் எனப் பலரைக் கொலைகள் செய்துள்ளாா்கள். இவா்கள் பதவிக்கு வருவதற்காக இனத்துவேசங்கள் ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தாா்கள்.    அத்துடன்  காணமல் போனவா்கள் பற்றி விசாரனைகளையும் செய்து இந் நாட்டிலேயே இவா்களுக்கு உரிய தண்டனைகளைப்  பெற்றுக் கொடுத்தல் வேண்டும். என மாணவத் தலைவா் அங்கு உரையாற்றினாா்  கோட்டா ராஜபக்ச விலகுமட்டும் எங்களது போரட்டம் தொடரும்......... அதன் பிறகு பாராளுமன்ற உறுப்பிணா்கள் என்ன செய்தாலும் முதலில் இந்த ஜனாதிபதியே பதவி விலகல் வேண்டும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe