Ads Area

கொழும்பு மத்தி ரோட்டரி ( Rotary club of Colombo Mid town)கழகத்தினால் பாடசாலைகளுக்கு கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைப்பு.

 ( எம்.என்.எம்.அப்ராஸ்)

கொழும்பு மத்தி ரோட்டரி  (Rotary club of Colombo Mid town) கழகத்தினரால் கல்முனை கல்வி வலய பிரிவில் உள்ள இரு பாடசாலைகளுக்கு கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை விருத்தி செய்யும் முகமாக பாடசாலைகளின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது கமு/கமு/ மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்துக்கு (தேசியபாடசாலை) 10 கணினிகள் அன்பளிப்பாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி அவர்களிடம் கொழும்பு மத்தி ரோட்டரி (Rotary club of Colombo Mid town) கழகத்தினரால் பாடசாலையில் வைத்து இன்று (10) கையளிக்கப்பட்டது.

இதேவேளை  கல்முனை கமு/கமு/ அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்க்கும் குறித்த கொழும்பு மத்தி ரொட்டரி கழகத்தினரால் (Rotary club of Colombo Mid town) 10 கணினிகள் அன்பளிப்பாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக் அவர்களிடம் பாடசாலையில் வைத்து இன்று(10) கையளிக்கப்பட்டது.

கொழும்பு மத்தி ரொட்டரி(Rotary club of Colombo Mid town) கழகத்தின் தலைவர் அர்சாட் ஜமால்ட்டீன், கொழும்பு மத்தி ரொட்டரி கழகத்தின் முன்னாள் தலைவர்களான இம்தியாஸ் இஸ்மாயில்,ஜி.எஸ் சில்வெஸ்டர், நுஹ்மான் சிராஜுதின்,அஸ்வான் பங்சஜயா மற்றும் சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலிக், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள்,என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.

மேலும் மாணவர்களின் நலன் கருதி குறித்த உதவியை செய்தமைக்கு பாடசாலை சமுகம் சார்பில் குறித்த  கொழும்பு மத்தி ரொட்டரி கழகத்திருக்கு பாடசாலை அதிபர்கள் நன்றியினை இதன் போது தெரிவித்தனர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe