Ads Area

சம்மாந்துறையில் கேன்களில் டீசல் ஏற்றிவந்த வடி ரக வாகனம் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் வடி ரக வாகனமொன்றில் 18 கேன்களில் டீசலை கொண்டு செல்ல முற்பட்டபோது பொதுமக்களால் மடக்கிப் முற்றுகையிட்டுள்ளனர்..

குறித்த எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் நடை பெறுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று (27) நள்ளிரவு 12.30 மணியளவில்  வடி ரக வாகனம் சம்மாந்துறை மணிக்கூட்டுகோபுரத்தால் கேன்களுடன் செல்வதை  எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்கள் அவதானித்தாகதெரிவித்தனர்.

குறித்த வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில்  மீண்டும் வரும் போது சம்மாந்துறைமணிக்கூட்டு கோபுரத்தடயில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் குறித்த வாகனத்தைசுற்றி வளைத்து தடுத்து நிறுத்தி கேன்களை பரிசோதித்த  போது சுமார் 18 கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டுஇருப்பதை அறிந்த பொதுமக்களுக்கும் வாகன சாரதிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

பின்னர் பொது மக்கள் பொலிஸாருக்கு தகவலை வழங்கியதன் பின் அங்கு வருகைதந்த சம்மாந்துறை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச் ஜெயலத் மற்றும் பொலிஸார்  வடி ரக வாகனத்தை  கைப்பற்றி அதில் உள்ள கேன்களில் டீசல்இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் சம்மாந்துறை  பொலிஸ் நிலையத்துக்கு  வடி ரக வாகனம் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சம்மாந்துறை  பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe