சவுதி அரேபியாவில் தற்போது கொரோனா தொடர்பாக விதித்திருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதோடு அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்களையும் சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ளது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடையம் என்னவெனில் சவுதி அரேபியாவுக்கு செல்லக் கூடியவர்கள் தற்போது பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதாகும்.
ஆனால் இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு புதிதாக செல்லக் கூடியவர்கள் அல்லது சவுதியிலிருந்து விடுமுறை வந்து விடுமுறை முடிந்து மீண்டும் சவுதிக்கு செல்லக் கூடியவர்களிடம் இலங்கை விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகள் முகீம் எரைவல் ரெஜிஸ்ரேசன் ( muqeem arrival registration) கண்டிப்பாக கேட்கின்றார்கள்...அதனை காண்பிக்காதோரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
ஆகவே சவுதிக்கு செல்லக் கூடியவர்கள் muqeem arrival registration னை கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம். இதனை சில விமான நிலைய டிக்கட் புக்கின் அலுவலகங்கள் செய்து கொடுப்பதற்கு 10 ஆயிரம் ரூபா வரை பணம் சுருட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அவ்வாறானவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் இதனை வெறும் 5 நிமிடத்தில் நீங்களும் செய்து கொள்ளலாம்.
சவுதியிலிருந்து விடுமுறை வந்து மீண்டும் சவுதி செல்பவராக இருந்தால் அவர் அதில் அவருடைய இகாமா இலக்கம், பிறந்த திகதி, புறப்படும் நாடு (departure country), வந்திறங்கும் நாடு (Arrival country), விமானம் (Flight Name), விமான இலக்கம் (flight number) ஆகிய தகவல்களையும், புதிதாக செல்லக் கூடியவர்கள் விசா இலக்கம், பாஸ்போட் இலக்கம் போன்ற தகவல்களையும் வழங்கி செய்து கொள்ளலாம்.
முகீம் எரைவல் ரெஜிஸ்ரேசன் ( muqeem arrival registration) னை இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் செய்து கொள்ளலாம் - https://arrival.muqeem.sa/#/vaccine-registration/home