Ads Area

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா: கமல்ஹாசனுக்கு மேலும் ஒரு கவுரவம்!

ஐக்கிய அரபு அமீரகம் நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது.

ஐக்கிய அமீரக அரசு, இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். ஸ்பான்சர்கள் உதவி இன்றி அந்நாட்டில் வாழவும், வேலை செய்யவும் முடியும். பத்து வருடங்களுக்குப் பிறகு விசா தானாகவே புதுப்பிக்கப்படும்.

நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், சுராஜ் வெஞ்சரமூடு, நடிகைகள் ஊர்வசி ரவுத்தலா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், காஜல் அகர்வால், பிரணிதா, த்ரிஷா, மீனா, ஆண்ட்ரியா, அமலா பால் உட்பட பலர் ஏற்கெனவே இந்த விசாவைப் பெற்றுள்ளனர்.

தமிழ் நடிகர்கள் பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், இயக்குநர் வெங்கட் பிரபு உட்பட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம்’ படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு துபாயில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் கமல்ஹாசன். அங்கு அமீரக அமைச்சர் முபாரக் அல் நஹ்யானை, அவருடைய மாளிகையில் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே அவருக்கு அமீரக அரசு கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe